மேற்கூறிய கூற்று பலித்திட வகை செய்யும் ஒரு உன்னத சாதனம் இதோ - http://www.tamilvu.org/
அகநானூறு, புறநானூறு, தேவ நூலாம் திருக்குறள், சங்க கால இலக்கியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என தொடங்கி, பாரதி, கவிமணி என இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிதைகள், உரைநடைகள் எல்லாவற்றையும் இனிதே தொகுத்து வழங்கும் நூலகம்!!
'sorry', 'thank you' ஆகிய வார்த்தைகள் நம் இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்டுவிட்ட நிலையில், நாம் அறியாத பல அழகிய தமிழ் வார்த்தைகளின் அர்த்தங்களை பறைசாற்றும் நான்கு "அகராதிகள்" !!
அறியாச் சிறுவர் கூட விஞ்ஞானம் பேசும் இந்த யுகத்திற்கு மிகவும் அத்தியாவசியமான "கலைச்சொல் தொகுப்புகள்"
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி. இவ்வகையில் நம் பண்பாட்டை நாம் அடுத்த தலைமுறைக்கு அன்பளிப்பாக்க மறந்தாலும் அறிய வைக்க முயற்சிக்க வேண்டும் என்பதற்காக ஓர் "பண்பாட்டுக் காட்சியகம்"
தன் சைக்கிள் ஐ பிடிக்க முடியாதவர் கூட 'encyclopedia' படிப்பார்! இதோ ஒரு அருமையான "கலைக் களஞ்சியம்" (encyclopedia).
எல்லாவற்றிலும் மேலான ஒரு முயற்சி...."சுவடிக் காட்சியகம்"! பழங்காலப் பொக்கிஷங்களை பார்வைக்கு வைத்து அவற்றின் உட்கருத்தையும் இனிமையாக விளக்கியிருப்பது அருமை !
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க்குடி!
No comments:
Post a Comment