Sunday, August 2, 2009

முரண்பாடு !

இந்த வார ஆ.வி. (ஆனந்த விகடன்) இல் "நானே கேள்வி நானே பதில்" பகுதியில் படித்த ஒரு சுவாரஸ்யமான கேள்வி-பதில்.


முரண்பாடுகள் ரசிக்கத்தக்கவைதானா ?

சில பொய்களும் சில உண்மைகளும் என்ற கவிதை தொகுப்பில் இருந்து ஒரு கவிதை.....


"குடிப்பதற்குத் தண்ணீர் தேடி இரவெல்லாம் கண் விழித்துவீதி வீதியாக குடங்களோடு அலைந்தோம் ....

எங்கள் துயரம் தீர்க்க எம்.எல்.ஏ வை நாடினோம் தொலைபேசியில் எப்போது கேட்டலும் கிடைத்த பதில்....'ஐயா குளித்துக்கொண்டிருக்கிறார்!' "

இந்த கவிதையை எழுதியவர், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி .

No comments: